தீபக்ராஜ்

என் விருப்பம் -- எழுத்தாளனாக

தீபக்ராஜ்


வாசிக்க விரும்புவோர் வாசிக்க விரும்பும் ஒரு எழுத்தாளனாக மாற விரும்பும் ஓர் இளம் எழுத்தாளன்..... வார்த்தைகளுக்கு சுவை சேர்க்கவும் என் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கவும் புத்தகம் எழுத துவங்கியவன்.

 • No:5 Bharathi Cross Street, New Perungalathur, Chennai - 600063
 • +91 730 570 7419
 • authordeepakraj@gmail.com
 • www.deepakraj.in
Me

ஓய்வு நேரங்களில்


நீ யார் என்று அறிய உன் நண்பனை கவனி.. அவன் குணம் அறிய அவனின் ஓய்வு நேர பணிகளை கவனி.. நான் உன் நண்பன் எனும் பட்சத்தில் என் ஓய்வு நேரப் பணிகள்.

புத்தகங்கள் வாசிப்பது 40%
எழுதுவது 20%
சமூக வலைத்தளங்களில் 25%
குடும்பத்தோடு 15%

தயாளப் பேரரசு

இக்கதை எனது கற்பனையில் உண்டான ஓர் மன்னனின் வாழ்க்கைக்கதை. ஒரு சாதாரண மானுடன் எவ்வாறு தன்னை பேரரசனாக மாற்றிக்கொண்டான் என்பதே இக்கதையின் மூலக்கரு

மேலும் அறிய

எறும்பு - பூனை

இதில் முதல் கதை நம் வாழ்வில் கிடைக்கப்பெறுபவை அனைத்தும் எளிதில் கிடைப்பதில்லை. அவை கிடைப்பதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், இரண்டாவது கதை இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது இயற்கையே என்பதையும் கருவாகக் கொண்ட இக்கதைகளை இவ்வுலக குழந்தைகளுக்கும், என் உலகமான குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் அறிய

மழுநீதித்தலைவன்

பரந்து விரிந்த இந்த உலகில் நடக்கும் ஒரு நிகழ்வு ஒவ்வொருவரின் பார்வையிலும் பல்வேறு கருத்துகளை பல்வேறு விதமாக இவ்வுலகில் வாழும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும். வளர்ந்து வரும் குழந்தைகள் கடிவாளம் பூட்டபட்ட குதிரையைப் போல் ஒரே பார்வையாக செல்லாமல் பரந்து விரிந்து பார்க்க வேண்டும். நன்மையில் இருக்கும் தீமைகளையும் தீமைகளுக்குள் இருக்கும் நன்மைகளையும் பிரித்தரியும் தன்மை வளர்த்து கொள்ளவேண்டும்.

மேலும் அறிய

புத்தியை தீட்டு

வெற்றி‌ என்பது கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய இரண்டை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிர்ஷ்டம் என்பது நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

மேலும் அறிய
0
புத்தகங்கள்
0
விருதுகள்
0
முகநூலில் பின்தொடர்பவர்கள்
0
விரைவில் புத்தகங்களாக
 • நான் உன்னோடு இருந்திட வேண்டும்

  உன் காதோரம் கருங்கூந்தல் ஆக மாறி..
  லோலாக்குடன் காதல் புரிந்து உன் காதினில்  அக்காதலை கூறிட‌ வேண்டும்..
  உன் விரல் தீண்டும் பேரின்பம் பெற்று காது மடலில் தவழ்ந்திட வேண்டும்..

  நீ உடுத்தும் உடையாக மாறி ..
  உனை முதலும் இறுதியுமாய் காக்கும் அரணாய் மாறிட‌ வேண்டும்..
  நாள்முழுவதும் உனை தவழ்ந்தே என் உலகம் இருந்திட வேண்டும்..

  உன் கால் தீண்டும் பாதுகையாய் மாறி..
  மண் முத்தம் தடுத்து என் முத்தம் உன் பாதத்தில் பதித்திட வேண்டும்..
  உன் உடல் முழுவதும் தாங்கி உன் காலடியில் நான் அடங்கிட வேண்டும்.

 • நேர்மை vs உண்மை


  தமிழில் சொல்லப்படும் வார்த்தைகள் மிகவும் நெருங்கியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போல இருந்திருக்கக்கூடும்.. ஆனால் நாம் நெருங்கிய வார்த்தைகள் என‌ எண்ணுபவை முற்றிலும் எதிர்மறை அர்த்தங்களை உறைத்திட செய்யும்..

  உதாரணமாக, நீங்கள் நேர்மையாக இருத்தல் மற்றும் உண்மையாக இருத்தல் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் என என்னைப்போல் தவறாக எண்ணி இருந்தால் இப்பொழுது நான் உணர்ந்தது போன்றே நீங்களும் உணர்ந்திட முயலுங்கள்.

  நேர்மையாக இருக்கும் மனிதர்கள், யாருக்கும் உண்மையாக இருப்பதில்லை. யாருக்காவது உண்மையாக இருக்கின்ற மனிதர்கள் நேர்மையாக இருக்க முடிவதில்லை..

  நீங்கள் செய்கின்ற தொழிலை நேர்மையாக செய்கிறீர்களா? அல்லது உண்மையாக செய்கிறீர்களா? உங்களுக்குள் வினா எழுப்பினாலே உண்மை விளங்கிவிடும்..

  எளிதாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் காதலிப்பவர்கள் இடம் உண்மையாக இருக்க வேண்டுமா? நேர்மையாக இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் அறிய முயலுங்கள்...

 • ஆசை ஆசையாய்


  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வாழ்ந்திட வேண்டும்..

  வண்டுகள் தீண்ட துடிக்கும் பூவின் மொட்டாய்..

  கதிரவனைக் கண்டு சிலிர்க்கும் சிறு புல்லின் பனித்துளியாய்..

  நுரைகள் ததும்ப ஆர்ப்பரிக்கும் புது வெள்ளமாய்..

  ஆசையாய் மண்ணை முத்தமிடும் கோடை மழையாய்..

  புது குழந்தை விரும்பி அணியும் பாதுகையாய்..

  முட்டி முட்டி மடியில் பால் குடித்திடும் குட்டிக்கன்றாய்..

  செந்நிற ரத்தம் வெண்ணிறமாகி தண்ணீர் கலக்கா புதுப்பாலாய்..

  கரையோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் பெருங்கடல் அலையாய்..

  உயர உயரப் பறந்து வானில் ஒளி கீற்றை பரப்பிடும் தீபாவளி பட்டாசாய்..

  காற்றை உள்ளிழுத்து இசையாய் மாற்றிடும் புல்லாங்குழலாய்..

  ஆசையாசையாய் பூமி தன்னை சுற்றிவர கதிர்களை கைகளாய் அனுப்பி தீண்டிடும் கதிரவனாய்..

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வாழ்ந்திட ஆசை..

 • ஆதி அந்தாதி


  சாகாவரம் கொண்டு தினம் தினம் செத்து மறுதினம் பிழைக்கும் வலிமை கொண்ட சூரியனாய்...

  சூரியனின் வெம்மைத் தாங்கி மற்றவருக்கு ஒளியையும், குளுமையும் தந்திடும் பெண்ணியம் கொண்ட சந்திரனாய்...

  சந்திரன் மேல் ஆசை கொண்டு தினமும் அலையை எழுப்பி கரை என்ற கட்டுக்குள் இருக்கும் கட்டுக்கடங்கா ஆழ்கடலாய்..

  ஆழ்கடலில் மூழ்கி  உப்பு நீரில் குளித்தாலும்  முத்துக் குளியல் என்ற பெயரும் வழங்கும் விலைமதிப்பில்லா முத்தாய்...

  முத்து சலங்கை உடன் போட்டிப்போட்டு காவியத்தில் நின்ற, சலங்கை கொண்ட மாணிக்கமாய்..

  மாணிக்கம் மதிப்பினை மேலும் கூட்டிட கட்டுக் கதையோ அல்லது உண்மை நிலையோ என அறிய இயலாத அதனை காக்கும் நாகமாய்.. 

  நாகமும் வளைந்து நெளிந்து தன் விஷமும் மங்கிடச் செய்யும் அழகிய பேச்சினை கொண்ட அற்புதப் பெண்ணாய்..

  பெண்ணின் அழகை வர்ணித்திட கொடி இடை எனத் தோன்றும் அழகிய இடை, அழகாய் வளைந்து நெளிந்து நாகமாய்...

  நாகம் என வளைந்து நெளிந்த இடையை அழகைக் கூட்டும் ஒற்றைக்குழி தொப்புள் ஜொலித்திடும் மாணிக்கமாய்..

  மாணிக்க தொப்புள்  கொண்ட அழகிய இடையில்,  இடையுடன் போட்டி போட்ட இடை ஆபரணம் மேலும் மெருகேற்ற தன்னுடன் வைத்த முத்தாய்..

  முத்துப் போன்ற பற்கள் வைத்த அழகிய செவ்வாய் கொண்ட அவளது மனமோ நான் மூழ்கிப் போகும் ஆழ்கடலாய்...

  ஆழ்கடல் மூழ்கி அங்கு காணும் இருளின் கருமையை திரட்டி முழுவதுமாய் பூசிய கருங்கூந்தல், அழகாய் அடங்கி கொள்ளும் வெண்ணிற காது பிறை ஒத்த சந்திரனாய்..

  சந்திரன் போல் குளுமை தரும் அவளது தேகம் எனை விடுத்து பிறர் நெருங்கிட நினைத்தால் அனலை கக்கும் சூரியனாய்..

  சூரியன் போல் ஒளிவீசி என் வாழ்வில் நல்வழி வழங்குவாள்.. அவளுடன் வாழும் என் நாளும் எனக்கு சாகா வரமே..

 • மதராஸ் எனும் நான்


  செம்மையாக உன்னை மாற்றத் துடிக்கும் நகரமே என் சென்னை..

  அலைகடலும் ஆசைகொண்டு, நெடுந்தூர கடற்பரப்பை சேலை என விரித்து ஊடல் கொண்டிடும் நகரமே என் சென்னை.. 

  நிகரில்லா தலைவர்களும், மதம் இல்லா அரசும் கொண்ட மதராசும் என் சென்னை..

  கப்படிக்கும் கூவமும், நல்மன மால்களும் கூடி கும்மாளம் அடிக்கும் அழகிய நகரம் என் சென்னை..

  ஆழிப்பேரலையும், பேரலையொத்த பெருவெள்ளமும், வாட்டிவதைத்த நன்னீர் வறட்சியும், புரட்டி போட்ட சூறைக்காற்றையும் கண்டு தலைநிமிர்ந்து நின்றவன் என் சென்னை..

  தீயாய் பரவிடும் நோய்த்தொற்று என் சென்னையை பாழ் செய்திட இயலுமா..

  எம் சென்னையை தூற்றுவோர் சற்றே அறிந்திட முயலுக..

  என் ஊர் பெயர் சென்னை.. அதற்கு மற்றொரு பெயரும் இருக்கு...
 • முன்னாள் காதலி


  முன்னாள் காதலி

  உனை எண்ணி நான் வரைந்த கோலங்கள் யாவும்.
  நீ நீங்கி சென்றபின் அலங்கோலமானதேனோ..

  வர்ணித்து வர்ணித்து உனை எண்ணி நான் எழுதிய கவிதைகள் எல்லாம்.
  இன்று தன்னிலை கண்டு, பொருள் நீங்கி  வெற்று வார்த்தைகள் ஆனதேனோ..

  நீயும் நானும் இணைந்து இதுவரை படைத்த நம் எதிர்காலம் யாவும்.
  என் விடியலாய் நீ இல்லை என்றுணர்ந்து உயிர் நீங்கி இறந்தகாலம்  ஆனதேனோ..

  கனவுலகில் அழகழகாய் நாம் பெற்று ஆசையாய் சூட்டிய பிள்ளைகளின் பெயரோ.
  இன்று நீ இல்லை என்றபின் தம்முடல் நீங்கி வெறும் பெயர்களாய் இவ்வுலகில் சுற்றுவதேனோ..

  தினந்தினம் உன்னோடு வாழ்ந்து புது புது நினைவுகளை படைத்திட துடித்தேன்.
  இதுவரை படைத்திட்ட நினைவுகள் யாவுமே உன்னை நீங்கி என்னை வதைப்பதேனோ.. 

  தீர்க்க சுமங்கலியாய் உனை கல்லறை வரை சுமக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
  இனிமேல் என் உயிர் நீங்கி கல்லறை செல்லும் வரை உனை காணாது இருப்பேனோ..

  நீ என்னை நீங்காதே...

 • அவள் ஒரு அணி


  உன் பூப்பாத இதழ்கள்.
  வெட்கத்தில் வளையும் விரல்கள்..
  புதுமெட்டி அணிய வைத்துக்கொள்...

  எனக்கு பிடித்த பாதங்கள்.
  நான் பிடிக்க வேண்டிய பாதங்கள்..
  முத்தமிட்டு முத்து கொலுசு அணிய வைத்துக்கொள்...

  உடை நழுவும் மெல்லிடை.
  பத்துவிரலும் பதியும் மென்னிடை..
  இடையாபரணம் அணிய வைத்துக்கொள்...

  நம் காதல் முத்தத்தின் முதலிடம்.
  வெட்டிய பிறை துண்டில்  முழு ஆதவன் உறைவிடம்..
  நெற்றிசுட்டி அணிய பத்திரமாய் வைத்துக்கொள்...

  இதுவரை பிடித்திடா விரல்கள்.
  இறுதிவரை பிடித்திட வேண்டும் விரல்கள்..
  என் பெயர் பொறித்த மோதிரம் அணிய வைத்துக்கொள்...

  இதுவரை நான் வரையறுக்க வார்த்தையற்ற காதில்.
  நம் காதல் சொல்லிய காதில்..
  காத(தி)ல் எண்ணத்தோடு அணிய என எண்ணிக்கொள்...

  பல  ஆபரணம் கண்ட‌ வெண்கழுத்து.
  நான் புது ஆபரணம் சூடப்போகும் மென்கழுத்து..
  நான் பொன்கயிறு கட்டிட ஓர் வார்த்தை சொல்...

 • வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  authordeepakraj@gmail.com

  கைப்பேசி

  +91 730 570 7419