• வேண்டுமா இந்த அன்னையர் தினம்???

  பெண்களே உங்களுக்கு எதற்கு  இந்த அன்னையர் தினம்???

  கருவாகி உருவாகி திங்கள் திங்களாய் நீங்கள் சுமந்து பெற்றெடுத்த அவர்களின் பெயரில் கூட ,  இனிஷியலாய் உங்கள் ஓர் எழுத்து இல்லை என்று ஆகிவிட்ட பின் உங்களுக்கு எதற்கு இந்த அன்னையர் தினம்...

  பிள்ளைகளின் பள்ளிக்கூட மதிப்பெண் அட்டையில் கையொப்பமிடும் அதிகாரம் முதலில் அவர்களின் தந்தைக்குத் தான்  என்று  முடிவு செய்துவிட்ட பிறகு உங்களுக்கு எதற்கு இந்த அன்னையர் தினம்..

  உங்கள் உதிரத்தை உணவாக வழங்கியும் அதே உதிரத்தை வேர்வையாக்கி அடுப்படியில் நீங்கள்  வெந்து அவர்கள் பசியாற தரும் உணவைவிட, கடைத்தெரு உணவே சுவையென உங்களை எள்ளி நகையாடும் பொழுது உங்களுக்கு எதற்கு இந்த அன்னையர் தினம்.

  உங்கள் துணையா? உங்கள் பிள்ளையா? என்ற முடிவுகளில் உங்கள் பிள்ளைகள் பக்கம் நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் துணையா? நீங்களா? என்று என்னும் பட்சத்தில் அவர்கள் அவர்களின் துணை தேடி சென்று விடுகின்றனரே! இப்படி இருக்கையில் உங்களுக்கு எதற்கு இந்த அன்னையர் தினம்..

  ஆணாக தோன்றிய எனக்கு எழுந்த இந்தக் கேள்விகள் யாவும் ஒரே ஒரு பெண்ணிற்கு கூட தோன்றவில்லையே..

  அப்படியே தோன்றினாலும் அவர்களின் பிள்ளைகள் "அம்மா" என்று அழைக்கும் அந்த ஓர் வார்த்தை அவர்களுக்கு பதிலாய் அமைந்துவிடுகிறது.

  எதையும் எண்ணாமல் அம்மா என்ற வார்த்தைக்காகவே வாழும் உங்களுக்கு இன்றைய தினம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமா அமைந்ததிட எந்தன் "அன்னையர் தின வாழ்த்துக்கள்".

  #அன்னையர்_தினம்

  -- Deepakraj

 • வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419