வெற்றிகளை கொன்று குவித்திடு..
நீ கொன்று குவிக்கும் வெற்றிகள் யாவும் உன் காலடியில் கிடந்திட வேண்டுமே அன்றி, உன் தலையில் தலைக்கணம் எனும் கிரிடம் ஆக மாறிட கூடாது..
நீ கொன்று குவிக்கும் வெற்றிகள் உன் காலடியில் கிடப்பது கண்டு புதிதாய் வரும் வெற்றிகள் உன் சரணம் பற்றிட வேண்டும்..
வெற்றிகளை கொன்று குவிக்கும் போது அவைகளை முழுமையாக கொன்று இருக்க வேண்டும் அல்லது அதனை வென்றிருக்க வேண்டும்.. இல்லையேல் அரைகுறையாக கொன்று வென்ற வெற்றியானது முதுகில் குத்திட செய்யும்..
நீ கொன்று குவிக்கும் வெற்றிகள் ஆனது விடாமுயற்சி எனும் வாளினால் வீழ்த்தப்பட வேண்டும். உன்னை ஆட்கொள்ள வரும் வெற்றிகளை உன்னுடைய முன்னால் தோல்விகள் என்னும் கேடயம் கொண்டு தடுத்திடு..
வெற்றிக் கொண்ட மன்னனின் பெயர் மட்டுமே அகிலத்தில் போற்றப்படும்.. உன் வெற்றிகளுடன் நீ போரிட்டு வெற்றிகொள். இந்த இறுதி வெற்றியே உலகில் உன்னை மன்னனாக முடி சூட்டிட செய்யும்...
-- Deepakraj