• வாழ்வதும் ஆள்வதும்


  வாழ்வதும் ஆள்வதும்...

  வாழைப்போல் வாழ வேண்டுமா? ஆலம்போல் ஆள வேண்டுமா?

  வாழும் காலம் குறைவானாலும் தன்னிடம் இருப்பதை முழுவதுமாய்  மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள வாழும் வாழைப்போல் ஒரு வாழ்க்கை..

  நீண்ட காலம் நிலையாக வாழ்ந்து வாழும் காலத்தில் மற்ற உயிர்கள் பயன்படும் அளவிற்கு வாழும் ஆலம் போல் மற்றொரு வாழ்க்கை..

  தன் பெயரை நிலைப்படுத்திக் கொள்ள தன்னிலிருந்து மற்றொரு உயிரை கொண்டு வாழையடி வாழையாய் வாழும் ஒரு வாழ்க்கை..

  தன்னை முழுவதுமாக நிலைநிறுத்திக்கொள்ள தன்னிலிருந்து விழுதை விதைத்து நிலையாக வாழும் மற்றொரு வாழ்க்கை..

  தன் பாதத்திலிருந்து உயிரைப் தோற்றுவித்து காண்போரை சிரம் வணங்கி பாதம் நோக்கச் செய்யும் வாழை போல் ஒரு வாழ்க்கை.. 

  தன் தலையிலிருந்து விழுதை தரைக்கு அனுப்பி காண்போர் தன்னை உயர்வாய் பார்க்க வைத்திடும் ஆலம் போல் ஓர் வாழ்க்கை..

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை விதைக்கப்பட்டுள்ளது..

  பிறர் காணும் வகையிலே உந்தன் வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது. காண்போரின் பார்வையை மாற்றிட உன்னால் மட்டுமே முடியும். வாழை போலோ ஆலம் போலோ..

  நீயே புதியதாய் உன் வாழ்வை வாழ்ந்திடு.. • வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419