சிறகை விரி..
உயர உயரப் பறக்க வேண்டும் எனில் சிறகை விரித்தே ஆக வேண்டும். மண்ணைவிட்டு விண்ணைத் தொடும் புகழை அடைய வேண்டும் எனில் பறவைகளைத் போல் சிறகை விரி..
உந்தன் சிறகு
உன் கற்பனையின் சிறகாக இருக்கட்டும்
உன் முயற்சியின் சிறகாக இருக்கட்டும்
உன் திறமையின் சிறகாக இருக்கட்டும்.
இவைகளின் சிறகுகள் விரிந்து பறக்கும்போது இந்த உலகமே அவற்றுக்கு கீழே இருக்கும்.
மயில்போல மனம் குளிர்ந்த நிலையில் சிறகை விரித்து நடனம் புரியாதே. நீ விரிக்கும் சிறகு ஆனது கழுகு விரிக்கும் சிறகை போன்று எட்டா உயரத்தில் இருக்க வேண்டும். நீ பறக்கும் உயரம் கொண்டே உன் இலக்கு எளிமையாய் தெரியும்..
-- Deepakraj