காலங்கள் ஓடுதடி கண்ணம்மா..
உன் காதலிலே வாழ்ந்திடவா சொல்லம்மா...
மீசையும் நரைக்குதடி கண்ணம்மா..
உன் மேல் கொண்ட ஆசைக்காக வாழ்ந்திடவா பொன்னம்மா..
உன் வார்த்தைக்காக ஏங்குகிறேன் கண்ணம்மா..
என் வார்த்தைகள் உன்னிடம் வந்து சேருமா..
உன் காதலில் என்னை வீழ்த்திவிடு கண்ணம்மா..
உன் கால் கொலுசில் நான் கரைந்திட வேண்டாமா..
நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா...
உன் கன்னம் ஏந்திட வேண்டுமம்மா...
முப்பொழுதும் உன் கற்பனைகள் கண்ணம்மா...
என் காதலில் கொஞ்சம் மூழ்கிதான் பாரம்மா..
எனை நீங்கி சென்றிடாதே கண்ணம்மா...
நீயின்றி நானில்லை என எண்ணம்மா..
-- Deepakraj