• காதலுடன் கடல்


  உலகமே எந்தன் ஆழம் அறிய ஆசைப்படுகையில் 
  அவை தோற்றுப்போகுமே உன் மனதின் ஆழத்தில்..

  முத்துக்களை கொண்டு உன்னை குளிக்க வைக்கவா ?
  இல்லை என் முத்தங்களை கொண்டு உன்னை குளிக்க வைக்கவா ?

  நீ கரையோரம் நடந்து சென்றால் உன் பாதச்சுவடுகளை கவர்ந்திடுவேன்...
  அது வேறு யாரையும் கவர்ந்து விட கூடாதென்று...

  அனைவர்க்கும் ஒலிக்கும் அலை ஓசையாவும், உன் நினைவில் வரும் என் மன ஓசைகளே..

  தரணி எங்கும் பரவி கிடக்கும் நான், இல்லாத இடம் உன் மனதில் மட்டுமே...

  பல மணல் கோட்டைகளை உடைத்தெரிந்ததாலோ 
  இன்று என் மனக்கோட்டை கேள்வி குறியானதடி..

  சுட்டெரிக்கும் சூரியனை மூழ்கடிப்பேன் ஆனால் உன் சுட்டும் விழி சூடரில் நான் மூழ்கிவிட்டேன்..

  இமயத்தையும் என்னுள் அடக்கிடுவேன்
  உன் இடையினில் நான் அடங்கிவிட்டேன்..

  நீலநிற ராமனும் நான் தான் உன்னுடன் பகலில் வாழ்கையில்..
  கருமை நிற கண்ணனும் நான் தான் 
  இரவில் காதல் புரிகையில்..

  உயிரினங்கள் பல என்னுள் வாழுதடி
  எந்தன் உயிரோ உனக்காக ஏங்குதடி..

  நீ இவ்வுலகம் விட்டு மண்ணுலகம் சென்றிடாதே
  நான் இவ்வுலகம் விட்டு விண்ணுலகம் சென்றிடுவேன்..

  காதலுடன்
  கடல்...


 • வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419