என்ன பயன்
உன் அழகை சிறை பிடிக்காமல் விழி மேல் வீற்று விழி காக்கும் இமைகள் இருந்து என்ன பயன்...
உன் விரலோடு விரல் கோர்க்காமல் தன்னை அழகேற்ற மோதிரம் அணியும் விரல்கள் இருந்து என்ன பயன்..
என்னை மயிர்கூச்ச செய்யும் உன் உதடினை தீண்டாமல் செந்தமிழ் சுவைக்கும் உதடு இருந்து என்ன பயன்...
தலையணையில் என்னை கட்டிபோடும் கறுங்கூந்தல் நுகராமல் வெற்று காற்றை சுவாசிக்கும் புலன் இருந்து என்ன பயன்..
உந்தன் பூப்பாதம் ஏற்க்காமல் அனுதினமும் துடிக்கும் இதயம் கொண்ட மார்பு இருந்து என்ன பயன்..
செந்தமிழும் வர்ணிக்க சொக்கும் நிகரில்லா சிரத்தை சாய்க்காமல் பலம் பொறுந்திய அக்கினை பெற்ற மடி இருந்து என்ன பயன்..
செங்கதிறும் தோற்றுபோகும் செங்கன்னம் ஏந்தாமல் பல்தொழில் புரியும் கரங்கள் இருந்து என்ன பயன்...
-- Deepakraj