தந்தையர் நாடு
தஞ்சம் வருபவர்களுக்கு நீ அள்ளி தருவதால் நீ தஞ்சையை கொண்டாயோ..
உன் மதுரம் யாவும் மருவி மதுரை ஆனதோ..
அன்னையாய் அனைவருக்கும் பாலை வழங்கிட பாலாற்றை கொண்டாயோ..
தேனினும் இனியவள் என்பதால் தேனியும் உன்னுள் உள்ளதடி..
வைகறையில் துயில் ஏழுப்பிட வைகை உன்னால் ஆனதடி..
சொல்லின் வல்லுவன் வள்ளுவனும் இக்குமரியின் பாதத்தில் உள்ளான் அடி..
அனைவரும் உன் அகத்தில் உள்ளதால் நீ தமி(ழ்அ)கம் ஆனாயோ.
இப்பெண்மை உள்ள நீயோ என் பாரதிக்கு என் தந்தையர் நாடு என ஆனாய் அடி..
-- Deepakraj