• ஆசை ஆசையாய்


  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வாழ்ந்திட வேண்டும்..

  வண்டுகள் தீண்ட துடிக்கும் பூவின் மொட்டாய்..

  கதிரவனைக் கண்டு சிலிர்க்கும் சிறு புல்லின் பனித்துளியாய்..

  நுரைகள் ததும்ப ஆர்ப்பரிக்கும் புது வெள்ளமாய்..

  ஆசையாய் மண்ணை முத்தமிடும் கோடை மழையாய்..

  புது குழந்தை விரும்பி அணியும் பாதுகையாய்..

  முட்டி முட்டி மடியில் பால் குடித்திடும் குட்டிக்கன்றாய்..

  செந்நிற ரத்தம் வெண்ணிறமாகி தண்ணீர் கலக்கா புதுப்பாலாய்..

  கரையோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் பெருங்கடல் அலையாய்..

  உயர உயரப் பறந்து வானில் ஒளி கீற்றை பரப்பிடும் தீபாவளி பட்டாசாய்..

  காற்றை உள்ளிழுத்து இசையாய் மாற்றிடும் புல்லாங்குழலாய்..

  ஆசையாசையாய் பூமி தன்னை சுற்றிவர கதிர்களை கைகளாய் அனுப்பி தீண்டிடும் கதிரவனாய்..

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வாழ்ந்திட ஆசை..


 • வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419