• தயாளப் பேரரசு

  Dhayala Perarasu


  "கேளடா…! பொன் வேல் ஏந்தியகிளிக்கொடி வேந்தே!பெருங்களிறு விரட்டி, ஐந்நின்றுரில்தன்னுயிர்நீத்த பெருநிலக்கிழாரின்தலைமகன் நானடா!"
  " தன் நிலம் விற்று, பிறர் நலம் காண,ஈகையில் அழிந்த பெருங்குடி எனதடா!"

  என்று‌ கவிதை நடையில் கதையை கூறவே எண்ணினேன்.

  ஆனால் என்னுடைய கற்பனை, அனைவரையும் போய் சேர வேண்டுமெனில் பொருள் செறிந்த வார்த்தைகளை விட அழகை மெருகேற்றும் நடைமுறை வார்த்தைகளை பயன்படுத்தினால் அனைவருக்கும் எளிதாக புரியும் என்று எண்ணி இக்கவிதை நடையை மாற்றி, கதை வடிவிலேயே எனது கற்பனையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  இக்கதை எனது கற்பனையில் உண்டான ஓர் மன்னனின் வாழ்க்கைக்கதை. ஒரு சாதாரண மானுடன் எவ்வாறு தன்னை பேரரசனாக மாற்றிக்கொண்டான் என்பதே இக்கதையின் மூலக்கரு. மன்னர்கள் வாழ்க்கைக்கதை என்பது போர், காதல், தந்திரங்கள் என அனைவரும் எழுதிய அதே நடைமுறையை தான் நானும் பயன்படுத்தியுள்ளேன். ஆயினும் சொல்ல வேண்டிய கதையை முன்னும் பின்னுமாக அமைத்து அதன் மூலம் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வேன் என்று எண்ணுகிறேன். ஓர் அரசனின் நிகழ்கால கதையில் ஆங்காங்கே இறந்தகாலத்தை புகுத்தி இக்கதையை உங்களுக்கு வழங்குகிறேன்.

  Dhayala Perarasu 1

  வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419