• எறும்பு - பூனை


    "குழந்தைகள்" - அவர்கள் வளர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல. நம்முடன் சேர்ந்து வளர்பவர்கள். பலசமயம் நம்மையே வளர்ப்பவர்கள். நாம் போகும் பாதையை காட்டக் கூடியவர்கள். அவர்கள் காட்டும் பாதையில் தான் நம் வாழ்க்கைப் பயணமே நகரும். எனவே அவர்கள் சரியான பாதையினை காட்ட பல்வேறு நல்லொழுக்கங்களை அவர்கள் அறிந்திருத்தல் வேண்டும். அறிவுரைகளை அப்படியே சொன்னால் அவை கசக்க செய்யும் அல்லது மனதில் பதியாமல் போகும். கதைகளுடன் சேர்த்து சொல்லப்படும்போது அவ்வறிவுரைகள் கதைகளாக, அக்கதையின் மானுடர்களாகவே அவர்களுடன் வாழும்.

    இதில் முதல் கதை நம் வாழ்வில் கிடைக்கப்பெறுபவை அனைத்தும் எளிதில் கிடைப்பதில்லை. அவை கிடைப்பதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், இரண்டாவது கதை இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது இயற்கையே என்பதையும் கருவாகக் கொண்ட இக்கதைகளை இவ்வுலக குழந்தைகளுக்கும், என் உலகமான குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன்.

    Erumbu-Poonai

    வரலாறு உங்களை தேடும்

    எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

    முகவரி

    No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

    மின்னஞ்சல்

    authordeepakraj@gmail.com

    கைப்பேசி

    +91 730 570 7419